டைட்டான் நிறுவனத்தின் தனிஷ்க் நடைக்கடை விளம்பரம் சர்ச்சையான நிலையில், அதை வாபஸ்பெறுவதாக தனிஷ்க் நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது, அதன் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
டைட்டன் நிறுவனமானது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மற்றும் டாடா குழுமம் மற்றும் இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனம் ஆகும். 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது டைட்டன் நிறுவனம். இதில் தமிழக அரசின் 28 சதவிகித பங்குகள் உள்ளன. டைட்டன் நிறுவனத்தின் 2வது பெரிய பங்குதாரராக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் திகழ்கிறது. தமிழக அரசின் முதன்மை பாதுகாப்பு டைட்டனின் தலைவராக உள்ளார்.
25 சதவிகித பங்குகளுடன் டாடா நிறுவனம் 3வது பெரிய பங்குதாரதாக உள்ளது. ஆரம்பத்தில், வாட்ச் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவனம் , பின்னர் நகை விற்பனை துறையில் கால் பதித்தது. இதன் தலைமை அலுவலகம் ஓரில் உள்ளது. டைட்டன் நிறுவனத்திற்கு ஓசூர், தேராதூன், மற்றும் கோவாவில் தொழில்சாலைகள் உள்ளது. கடிகாரத்துறையில் உலகளவில் ஆறாவது பெரிய வாட்ச் தயாரிப்பு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனிஷ்க் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரமான இந்து மதத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விளம்பரம், லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாக இருப்தாக வலதுசாரிகள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், இந்த விளம்பரததுக்கு காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், நகை விளம்பரம் அரசியலாக்கப்பட்டது.
இதையடுத்து, குஜராத்தில் உள்ள தனிஷ்க் கடையில் மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி உள்ளது. கடையின் மேலாளரை கும்பல் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குமாறு கூறி உள்ளது. அதையடுத்து,