டில்லி,
டம்பர பொருட்கள் மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று  மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.  மேலும் கூடுதல் வரி உச்சவரம்பு 15 சதவீதமாக இருக்கும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக ஒரே வரி விகித முறையைன,  சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) இந்த ஜூலை 1ந்தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

அதன் காரணாக மத்திய மாநில அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கனவே அமைக்கப்பட்டு, அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் கூடியது. அப்போது,  ஆடம்பர பொருட்கள் மீதான 28 சதவீத வரி மீது கூடுதல் வரியை விதித்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு வழங்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆடம்பர பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி மீது விதிக்கப்படும் கூடுதல் வரியை 15 சதவீதம் என்ற உச்சவரம்புடன் நிர்ணயிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வரி விதிப்புக்கு கவுன்சில் கூட்டத்தில் அனைவரும் ஒருமனதாக ஒப்புதல் அறித்தனர் என்றும் நிதி அமைச்சக அறிவிப்பு உறுதி செய்துள்ளது.