சென்னை: தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றுவெளியிட்டார். அதைத் தொடர்ந்து, முதல்வர்  ன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதற்கான விழா, சென்னை ராஜா அண்ணா மலைபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் தொழில்துறை சார்பில் நடக்கிறது. இந்த விழாவில், தமிழகத்தின் புதிய தொழில் கொள்கை-2021, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் கொள்கை -2021 ஆகிய இரு தொழில் கொள்கைகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து, ரூ.28 ஆயிரத்து 53 கோடி மதிப்பில் 68,775 பேருக்கு வேலை அளிக்கும், 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ட 4 இடங்களில் தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் 68,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இதுதவிர, ரூ.3,489 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற தொழில் திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்ததுடன்,  10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டைகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.