சென்னை:  தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 619  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது,.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,02,826  கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 5,71,30,470 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 619 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,45,261 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 16,02,382 பேர் ஆண்கள், 11,42,841 பேர் பெண்கள்,  இன்றைக்கு மட்டும் 369 ஆண்கள், 250 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 6 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,750 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 02 பேரும், அரசு மருத்துவமனையில் 04 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மேலும் 638 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,01,974 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 6,537 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 318 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 249 உள்ளன.

கொரோனா தொற்று பாதிப்பில் தலைநகர் சென்னை  முதலிடத்தில் தொடர்கிறது.அங்கு இன்று 194  பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  கோவையில் 84 பேருக்கும், செங்கல்பட்டில் 659 பேருக்கும் , ஈரோட்டில் 40 பேருக்கும், திருப்பூரில் 33  பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 1194  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,61,709 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர்  பலியாகி உள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 8648 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 122 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,51,542  தற்போது சென்னையில் மட்டும்  1519 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்புமாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1
செங்கல்பட்டு 59
சென்னை 194
கோவை 84
கடலூர் 7
தர்மபுரி 2
திண்டுக்கல் 2
ஈரோடு 40
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 18
கன்னியாகுமரி 9
கரூர் 9
கிருஷ்ணகிரி 2
மதுரை 7
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 2
நாமக்கல் 16
நீலகிரி 4
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 0
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 4
சேலம் 29
சிவகங்கை 4
தென்காசி 1
தஞ்சாவூர் 8
தேனி 0
திருப்பத்தூர் 1
திருவள்ளூர் 22
திருவண்ணாமலை 5
திருவாரூர் 9
தூத்துக்குடி 3
திருநெல்வேலி 4
திருப்பூர் 33
திருச்சி 16
வேலூர் 12
விழுப்புரம் 0
விருதுநகர் 3