சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 4707  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோர் எண்ணிக்கை 1,66,956  ஆக அதிகரித்தள்ளது.

தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,659 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்ட ரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்:
அதிகபட்சமாக சென்னையில் இதுவரை, 96,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 4,052 பேருக்கும் திண்டுக்கல்லில் 2,566 பேருக்கும் திருநெல்வேலியில் 4,350 பேருக்கும், ஈரோட்டில் 656, திருச்சியில் 3,755 பேருக்கும், நாமக்கல் 576, ராணிப்பேட்டை 4,306, செங்கல்பட்டு 13,348 மதுரை 10,392, கரூர் 388, தேனி 4,337 மற்றும் திருவள்ளூரில் 12,806 பேருக்கு, தூத்துக்குடியில் 6,278, விழுப்புரத்தில் 3,361 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 817 பேருக்கும், திருவண்ணாமலையில் 5,644 தருமபுரியில் 740 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்,  திருப்பூரில் 757, கடலூர் 2,668, மற்றும் சேலத்தில் 3,309, திருவாரூரில் 1,548, நாகப்பட்டினம் 601, திருப்பத்தூர் 1,013, கன்னியாகுமரியில் 4,073 மற்றும் காஞ்சிபுரத்தில் 8,017 பேருக்கும், சிவகங்கை 2,182 மற்றும் வேலூரில் 5,385 பேருக்கும், நீலகிரியில் 726 பேருக்கும், தென்காசி 1,844 கள்ளக்குறிச்சியில் 3,498 பேருக்கும், தஞ்சையில் 2,366, விருதுநகரில் 6,884, ராமநாதபுரத்தில் 3,132 பேருக்கும், அரியலூர் 893 மற்றும் பெரம்பலூரில் 368 பேருக்கும், புதுக்கோட்டையில் 1,844 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,770 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.