டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 11,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 11,793 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,18,839ஆக உயர்ந்தது. நேற்று 17,073 ஆக இருந்த நிலையில், கடந்த 24மணி நேரத்தில் 11,793 ஆக குறைந்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 27 பேர் இறந்துள்ளனர், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,047 பேர் ஆக உள்ளது.
நாடு முழுவதும் தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 94,420-லிருந்து 96,700 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 9,486 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,27,97,092 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,97,31,43,19 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 19,21,811 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.