சென்னை: வரும் 27 , 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் செப்டம்பர் மாதம் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. நவம்பர் 1ந்தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறப்படுகிறது. இதற்கிடையில் கல்லூரி, பாலிடெக்னிக் போன்ற உயர்கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இநத் நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு அக்டோபர் 27, 28ந்தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்வுக்கு 1.38 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததனர்.
இந்த நிலையில், அக்டோபர் 27 மற்றும் 28 ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே மாணவர்கள் தேர்வு எழுதும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.