மெக்சிகோ

மெக்சிகோவில் ஒரு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று அதிகாலை மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியிலிருந்து சாண்டியாகோ டி யொசண்டு நகருக்கு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது.  அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

பேருந்து ஒஹஸ்கா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். தவிர, 17 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.