பெங்களூரு:

னியார் விளம்பர பதாகையை மறைக்கின்றன என்பதற்காக 27 பசு மரங்கள் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கர்நாடக மாநிலம்  தலைநகரான பெங்களூருவின் ஒரு பகுதி மரதஹல்லி. இங்கு  உள்ள வெளிவட்ட சாலையில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்தில் மொபைல் போன் விளம்பர பதாகை வைக்கப்பட்டது.  சாலையில் இருந்து இந்த பதாகையை பார்க்கும் போது இடையில் உள்ள மரங்கள் விளம்பர பதாகையை மறைத்தது.

இதையடுத்து, அந்த விளம்பர பதாகையை வைத்தவர்கள் குறுக்கீடாக இருந்த 27 மரங்களில் ரசாயன விஷத்தை (அமிலம்) ஊற்றிவிட்டனர். இதனால் மரங்கள் பட்டுப்போக ஆரம்பித்தன.  . மேலும், 13 மரங்களின் கிளைகளை வெட்டி எறிந்துள்ளனர்.

இந்த விசயம், வனத்துறைக்குத் தெரியவரவே மரங்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால் மூன்று மரங்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற மரங்கள் பட்டுப்போய்விட்டன.

இது குறித்து விசாரித்து வருவதாகவும், மரங்களை அழித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனறும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.