டெல்லி: மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கு (ஓபிசி) 27% இடஒதுக்கீடு முறையையும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு முறையையும் இந்தாண்டு அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய அரசு மு அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்ற வற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று அரசு கூறியிருக்கிறது. இதில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது. இந்த  முடிவால் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், சமூக நீதியின் புதிய கட்டத்துக்கு செல்லவும் உதவியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆனால், மத்தியஅரசின் அறிவிப்புக்கு   தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகன்றன.

மத்தியஅரசின்  இந்த அரசாணைக்கு எதிராகவும், தடைவிதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தற்போது உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் பல ஆண்டுகளாக எங்களது இயக்கம் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. எனவே தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என இடைக்கால மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது.

மேலும் 27% இடஒதுக்கீடு முறையை இந்தாண்டு அமல்படுத்துவதில் எந்த தடையும் விதிக்கக்கூடாது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணையை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்தாண்டே அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.