டெல்லி: மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து அறிவித்து உள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,549 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், கொரோனா தொற்று காரணமாக  488 பேர் உயிரிழந்தும,  9,868 பேர் குணமடைந்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில், புதிதாக  மேலும் 10,549 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,55,431  ஆக அதிகரிதுத உள்ளது.

நேற்று கொரோனாவுக்கு  புதிதாக மேலும்  488 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,67,468 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவழத்ம நேற்று  ஒரே நாளில் 9,868 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,77,830 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.33% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதம் 1,10,133 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 83,88,824 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,20,27,03,659 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.