டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 356 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக பட்ச பாதிப்பு கேரள மாநிலத்தில் பதிவாகி உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில்  புதிதாக மேலும் 6,664 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 53 பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவிகிதாம் கேரளாவில் பதிவாகி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக மேலும் 12,428 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,02,202 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் மேலும்  356 பேர் கொரோனாவல்  இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,55,068 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து  15,951 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,35,83,318 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,63,816 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று மட்டும் 64,75,733 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தற்போது வரை நாடு முழுவதும் 1,02,94,01,119 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.