சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7 மணி அளவில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  25,50,282 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 33,937 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்று 2361 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதுடன், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  24,93,583 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3,66,72,027 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,37,292 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 22,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 10,60,190 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 736 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,90,054 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,049 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 278 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 209.

கொரோனா தொற்று அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கோவையில் இன்று 164 பேரும், ஈரோட்டில் 127 பேரும், சென்னையில் 122 பேரும், தஞ்சாவூரில் 103 பேரும், சேலத்தில் 102 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.