ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டி உள்ளது.
2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் பரவி வருகிறது. தற்போது உருமாறிய நிலையில், தொற்று பரவல் நீடித்து வருகிறது. இதன் பாதிப்பு உலக நாடுகளின் பொருளதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.11 கோடியைக் கடந்துள்ளது. அதாவது, 18,11,75,561கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக 39,24,972 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,57,61,282 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பரவலில் அமெரிக்கா முதலிடத்திலும், அதையடுத்து இந்தியா 2வது இடத்திலும் தொடர்கிறது.