சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக மேலும் 5 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 698 உடன் முதல் இடத்தில் உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது. அதில் 23 லட்சத்து 75 ஆயிரத்து 963 பேர் குணமடைந்j நிலையில், இதுவரை 32 ஆயிரத்து 51 பேர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனாதொற்று காரணமாக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 47,318 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,31,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 11 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை கொரோனாவால் 8,143 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 245 பேர் குணம் அடைந்த நிலையில், இதுவரை 5,19,373 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 3,611 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மண்டலம் வாரியாக விவரம்:
[youtube-feed feed=1]








