டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,628 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,167 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த இரு நாட்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டி உள்ளது. மத்திய சுகாதா அமைச்சகம் இன்று காலை 8மணியுடன் முடிந்த 24மணி நேரத்தில், கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மேலும் 2,628 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,44,820 ஆக உயர்ந்தது. கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,525 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 2,167 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,04,881ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும், 15,414 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,13,687 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,92,82,03,555 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.