சென்னை:
மிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646  பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  மொத்த பாதிப்பு 17,728 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிப்புக்குள்ளான 646  பேரில் 509 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 11,640 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4,31,739 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.   இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 68 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11,217 ஆண்கள், 6,506 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உள்ளது. இதில்,  18 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 52.69% ஆக உள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்…

 
 

[youtube-feed feed=1]