டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 2812 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து அறிவித்துள்ளது. அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும், 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சசை பெற்று வருவோர்கள் எண்ணிக்கை  28 லட்சத்து 13 ஆயிரத்து 658 பேராக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 272 பேர் குணமடைந்திருப்பதால், இதுவரை   1 கோடியே 43 லட்சத்து 4 ஆயிரத்து 382பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை  பெற்று வந்தவர்களில்,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,  2 ,812 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 14 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரத்து 223 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]