தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1059, செங்கல்பட்டில் 393, திருவள்ளூரில் 142 மற்றும் காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 117, கன்னியாகுமரி 88, திருச்சி 72, திருநெல்வேலி 70, தூத்துக்குடி 62, மதுரை 50,

ராணிப்பேட்டை 41, சேலம் 38, ஈரோடு 34, விழுப்புரம் 27, சிவகங்கை 25,

கிருஷ்ணகிரி 19, விருதுநகர் 17, பெரம்பலூர் மற்றும் தென்காசியில் தலா 16 பேருக்கும், வேலூர் 15,

தஞ்சாவூர் 14, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் திருப்பூரில் தலா 13 பேருக்கும்,

அரியலூர் 12, தேனி 10, நாகப்பட்டினம், நீலகிரி மற்றும் திருவாரூரில் தலா 9 பேருக்கும்,

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் கரூரில் தலா 7 பேருக்கும்,

மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் திருப்பத்தூரில் தலா 5 பேருக்கும், புதுக்கோட்டை 4, கடலூர் மற்றும் தருமபுரியில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, அசாம் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது,

இன்று மொத்தம் 32,789 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,400 ஆண்கள் 1,133 பெண்கள் என மொத்தம் 2,533 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1,372 பேர் இன்று குணமடைந்த நிலையில் 13,319 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.