பாட்னா:
பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இது வரை 253 பேர் இறந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளது.
அங்கு ஏற்பட்டுள்ள இந்த பிரளயத்தால் மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களை சேர்ந்த 1.26 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ராணுவம் மற்றும் பேரிடர் மீட்டு குழுவை அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் நிதீஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
வெள்ளம் தொடர்பான 10 முக்கிய அம்சங்கள்
* பாட்னா, கயா, பகல்பூர், புர்னியே ஆகிய பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நாளை பல இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* பேரிடர் மீட்பு குழு தகவலின்படி 4.21 லட்சம் பேர் பீகாரில் உள்ள ஆயிரத்து 358 மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
* கடந்த சனிக்கிழமை வரை 202 பேர் இறந்துள்ளனர். 18 மாவட்டங்களில் 1.21 கோடி பேர் வரை பாதி க்கப்பட்டிருந்தனர்.
* பீகார் அராரியா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், ஒரு சிறுமி ஆகியோர் நட ந்து சென்றபோது பாலம் இடிந்து விழுந்து பலியான சம்பவத்தின் வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்ப டுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 57 பேர் இறந்துள்ளனர்.
* சித்தாமார்கி, மேற்கு சாம்பரன், கதிகார், கீழக்கு சாம்பரன், மதுபானி, சுபால், மாதேபுரா ஆகிய மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் புணரமைக்க உதவி செய்யப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதற்கு நிதி பற்றாகுறையாக இருக்காது. பேரிழப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் நிதியுதவியை பெற முதல் உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.
* குர்சகந்தா, பாலசி, சிக்தி, அராரியாவில் கோகிஹத், கிழக்கு சாம்பரத்தில் சுகவுலி ஆகிய பகுதிகளில் வான் வழி மூலம் உணவு பொட்டலங்களை வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
* பீகாரில் உள்ள கோஷி, மகாநந்தா, கண்டக், பேக்மதி, கங்கை ஆகிய நதிகளில் அதிக மழை காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* அதிகப்படியான பருவ மழை வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. உ.பி.யை ஓட்டியுள்ள பீகார் மாநில பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி 69 பேர் இறந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் அஸ்ஸாம் வெள்ளத்தால் பயிர்களும், வீடுகளும் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் சிறிய வன விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளது.
* அஸ்ஸாம் மாநிலத்தில் 15 மாவட்டங்களை சேர்ந்த 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதித்துள்ளனர். இதில் மேலும் 4 பேர் இறந்துள்ளனர்.