மியான்மரில் சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவர்கள் அங்கு சென்றதும், சைபர் மோசடியில் ஈடுபடுத்தப்படுவதுடன் இவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாதபடி சிறைபிடித்து வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் மியான்மரின் சுரேன் மாகாணத்தில் இணையவழியில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க அடைத்து வைக்கப்பட்டிருந்த 250 வெளிநாட்டினரை அந்நாட்டின் பழங்குடியின ஆயுதப் படையினர் மீட்டனர்.
20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இவர்களை அண்டை நாடான தாய்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அவர்கள் அங்கிருந்து அவரவர் தாய்நாட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.