சென்னை: கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு 25 ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இங்கு 100 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிங்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கையில் 25 படுகைகள் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
மேலும், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக கருதுபவர்கள், அருகாமையில் உள்ள ஸ்கிரீனிங் சென்டரை அணுகி, எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 890 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம் என்றார்ல.
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தார்.