சென்னை: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்   இதுவரை 26,04,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல 34,761 பேர் கொரோனா தொற்றுக்கு உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில்  25,50,710  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாநில தலைநகர் சென்னையில் நேற்று 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்மூலம்  சென்னையில்  மொத்த பாதிப்பு 5,42,902 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  2 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,386 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று   216 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,32,467 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,049 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

24.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 37,04,807 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 24.08.2021 அன்று 24,794 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.