சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமான பாதிப்பு சென்னையிலேயே நிகழ்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் மேலும் 1278 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளான நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,26,677 ஆக அதிகரித்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,234 பேர், கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோர் எண்ணிக்கை 1,10,819 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையில் நேற்று ஒரேநாளில் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இதுவரை கொரோனாவுக்கு பலியாகியானோர் எண்ணிக்கை 2,603 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், 13,225 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 13,124 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் 60.16% ஆண்களும் 39.84% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டல வாரியாக கொரோனா தொற்று குணமடைந்தவர்கள் விவரம்
1 திருவொற்றியூர் 3,865
2 மணலி 1,855
3 மாதவரம் 3,825
4 தண்டையார்பேட்டை 10,078
5 ராயபுரம் 11,816
6 திருவிக நகர் 8,603
7 அம்பத்தூர் 7,353
8 அண்ணா நகர் 12,700
9 தேனாம்பேட்டை 11,410
10 கோடம்பாக்கம் 12,736
11 வளசரவாக்கம் 6,612
12 ஆலந்தூர் 3,852
13 அடையாறு 8,312
14 பெருங்குடி 3,429
15 சோழிங்கநல்லூர் 2,841
16 இதர மாவட்டம் 1,532.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 257
2 மணலி 144
3 மாதவரம் 575
4 தண்டையார்பேட்டை 741
5 ராயபுரம் 856
6 திருவிக நகர் 976
7 அம்பத்தூர் 1,360
8 அண்ணா நகர் 1,528
9 தேனாம்பேட்டை 839
10 கோடம்பாக்கம் 1,531
11 வளசரவாக்கம் 1,186
12 ஆலந்தூர் 599
13 அடையாறு 1,230
14 பெருங்குடி 571
15 சோழிங்கநல்லூர் 535
16 இதர மாவட்டம் 327 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.