டெல்லி: ‘நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழங்கள் இயங்கி வருவதாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்து இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் அமளிகளுக்கு இடையேயும் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், போலி பல்கலைக்கழகங்கள் மீதான நடவடிக்கை குறித்து லோக்சபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில், மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி,நாடு முழுதும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை யு.ஜி.சி., கண்டறிந்துள்ளது.
யு.ஜி.சி.,யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
போலி பல்கலைக்கழகங்கள் அதிகமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளதாகவும், அங்கு 8 போலிபல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அடுத்ததாக தலைநகர் டெல்லியில் 7 போலி பல்கலைக்கழகங்களும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு போலி பல்கலைக்கழகங்களும், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைகழங்கள் என மொத்தம் 24 போலி பல்கலைக்கழகள் கண்டிறயப்பட்டு உள்ளது. . இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.