சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சபரிமலையில் மண்டலபூஜை நாளை தொடங்குகிறது. இந்த பூஜையையொட்டி 41 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கு. இதையொட்டி லட்சக்கணக்கான தமிழக மக்கள் சபரிமலை செல்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த தகவல் மையமானது இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை செயல்படும் என்றவர், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டணமில்லா தகவல் மைய சேவை எண்ணான 044-28339999-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.