டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 61,749 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்தஎண்ணிக்கை 31,05,185 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கடுமையாக உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாத காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்றன.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 61,749 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 31,05,185 ஆக அதிகரித்த உள்ளது.
தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7,10,143 ஆக உள்ளது.
நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 56,896 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்யுள்ளோர் எண்ணிக்கை 23,36,796 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 846 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 57,692 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தமிழகமும், 3வது இடத்தில் ஆந்திர பிரதேசமும், 4வது இடத்தில் கர்நாடக மாநிலமும், 5வது இடத்தில் உ.பி.யும் தொடர்ந்து வருகிறது.