டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்ப தாகவும், 836 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

சீனாவில் இருந்து  பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி, ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், தொற்று பாதிப்பு எண்ணிக்கையும்,உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,06,349 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 836 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு இருந்து 57,468 பேர் குணமடைந்தனர். இதனால், பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 23,38,035 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் 7,10,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா இறப்பு விகிதம் 1.82% ஆகவும், குணமடைவோர் விகிதம் 77% ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த17 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவலின்படி நேற்றுவரை 3,52,02,137 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் மட்டும் 6,09,917 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.