ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  19.40 கோடியாகவும், குணமடைந்தோர் 17.61 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

சீனாவின்  வுகான் நகரில்  2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும்  உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. வருகிறது. தற்போது உருமாறி பல்வேறு வகையில் பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 194,010,062 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 176,116,648 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4,159,511 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும்,  இந்தியா 2வது இடத்திலும்,, பிரேசில் 3வது இடத்திலும் தொடர்ந்து வருகிறது.