24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…

Must read

சென்னை: 24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும்,  27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவலின்படி,  மேலும் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,46,689 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் தொற்றில் இருந்து இன்று மேலும் 2,583 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 24,88,775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 33,889 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 5 பேரும், அரசு மருத்துவமனையில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 24,025 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,41,758 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,63,90,516 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,87,959 பேர் ஆண்கள், 10,58,692 பேர் பெண்கள்.

இன்றைக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில்  1,026  பேர் ஆண்கள் 793 பேர் பெண்கள்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 69 அரசு மையங்கள் 209. தனியார் மையங்கள் உள்பட மொத்தம் 278 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

More articles

Latest article