சென்னை: தமிழகத்தில் இதுவரை 10லட்சத்து 51ஆயிரத்து 487 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3லட்சத்துஆயிரத்து 541 பேர்  பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று புதிதாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 432 ஆண்கள், 5 ஆயிரத்து 344 பெண்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 12வயதுக்கு உட்பட்ட 514 குழந்தைகளும் அடங்குவர்.  அதிகபட்சமாக சென்னையில் 3,842 பேரும், செங்கல்பட்டில் 985 பேரும், கோவையில் 889 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 54 பேரும், அரியலூரில் 46 பேரும், பெரம்பலூரில் 10 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 38 ஆயிரத்து 99 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ,

நேற்று ஒரே நாளில், 78 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில்  அரசு மருத்துவமனையில் 34 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் என 78 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இவர்களில் 37 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 8,078 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,920 பேரும், செங்கல்பட்டில் 791 பேரும், கோவையில் 419 பேரும் அடங்குவர். இதுவரையில் 9 லட்சத்து 43 ஆயிரத்து 44 பேர் குணம் அடைந்து உள்ளனர்.

தற்போது தமிழகம் முழுவதும் 94 ஆயிரத்து 48 பேர் சிகிச்சையில் உள்ளனர்.