சென்னை:
வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக ஆலோசனை நடத்த உள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் தற்காலிக கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்து தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற உள்ளது.
Patrikai.com official YouTube Channel