சென்னை: தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள பிளஸ்2 மாணாக்கர்களில், மதிப்பெண்களில் திருப்தி அடையதாவர்கள் மறுதேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம் என தமிழகஅரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு  23 மாணவர்களே மட்டுமே  விண்ணப்பித்துள்ளனர். இதை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பிளஸ்2 மாணாக்கர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது. அரசு வழங்கிய மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாத மாணாக்கர்கள் துணைத்தேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்டு  6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை துணைத்தேர்வுகள்  நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  பிளஸ்2 விருப்பத் தேர்வு எழுத 23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்தார்.