சென்னை: பெகாசஸ் விவகாரம், மேகதாது அணை குறித்து காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உண்மையை வெளிக்கொண்ர வேண்டும் என்று கூறியவர், தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணை கட்டும் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கருத்து கூறுவதை தவிர்த்தார்.

தமிழக காங்கிரஸின் எதிர்கால செயல் திட்டம் குறித்து இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்றுமுதல் நடைபெற்றது.

இன்று 2வது நாள் ஆலோசனை கூட்டம்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ள அரசியல் சூழ்நிலை, பெகாசஸ் விவகாரம், மேகதாது அணை உள்பட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்தும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செய்தியளார்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மோடி அரசு பெகாசஸ் விவகாரம் குறித்து பேச மறுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், பத்திரிகை ஆசிரியர் என்.ராம், சசிகுமார்  உள்பட பலர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில், உண்மையை உலக்கு அறிவிக்கும் வகையில், அதை  வெளிக்கொண்டுவர வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்.

இந்த டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து, வெளிநாடுகளில் கூட விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்க கூடிய நிலையில், பாராளுமன்றத்தில்  விவாதிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகள் குறித்து  ஒட்டுக கேட்கும் கருவிகள் மூலம் சொந்த நாட்டில், சொந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது வெட்கக்கேடான விஷயம். இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி அமித்ஷா நேரடியாக தலையீடு இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

பின்னர் செய்தியளார்களிடன கேள்விக்கு பதில் அளித்தவர்,

மேகதாது விவகாரத்தில் அந்தந்த மாநில;ததைச் சேர்ந்தவர்கள்  அவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வருகின்றனர். இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கழன்று கொண்டார்.

அதுபோல மேகதாது அணை விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரே என்ற கேள்விக்கு,  அண்ணாமலை ஏன்   பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மறுக்கிறார் என எதிர்கேள்வி எழுப்பினார்.

அசாம் பா4க முதல்வர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, அசாம் மற்றும் மிசோரமில் போர் மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இரு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் வருவதாலும், அமித்ஷா நேரடியாக தலையிட்டு சுமூகமாக முடித்திருக்க வேண்டும், ஆனால் தவறிவிட்டார் .

இவ்வாறு அவர் கூறினார்.