சென்னை: சென்னையில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது. அதுபோல,  அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் குறைந்துள்ளது.

தமிழகத்தில்கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  7,00,193 ஆக உயர்நதுள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று மட்டும்   833 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு  1,93,299 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி   13 பேர் உயிர் இழந்ததால், இதுவரை உயிரிழந்தோர்  மொத்த எண்ணிக்கை 3,569 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் குணமடைவோர் 90 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. நேற்று   1077 பேர் குணம் அடைந்த நிலையில், இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை  1,78,623  ஆக அதிகரித்து உள்ளார்.  தற்போது சென்னையில் 11,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதித்த நோயாளிகளில் 62 சதவீதம் பேர் ஆண்கள், சுமார் 37 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். பாதிப்புக்குள்ளானவர்களில்  50 – 59 வயதுக்குட்பட்டவர்களே அதிகம். இந்த வயதுடைய 18.54 சதவீதம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் 30 – 39 வயது மற்றும் 40 – 49 வயதுடையவர்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கத்தில் மட்டும் 900 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மண்டலங்கள் வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்!!
 1    திருவொற்றியூர்    5456
2     மணலி     2860
3     மாதவரம்     6475
4     தண்டையார்பேட்டை   14374
5     ராயபுரம்     16522
6     திருவிக நகர்    13754
7     அம்பத்தூர்   12653
8     அண்ணா நகர்   19811
9     தேனாம்பேட்டை    17087
10     கோடம்பாக்கம்    19740
11     வளசரவாக்கம்    11567
12     ஆலந்தூர்    7126
13     அடையாறு    14066
14     பெருங்குடி   6417
15     சோழிங்கநல்லூர்   5018
16     இதர மாவட்டம்    5697
மண்டலங்கள் வாரியாக கிச்சை பெறுவோர் விவரம்:
 1   திருவொற்றியூர்   247
2     மணலி      119
3     மாதவரம்    369
4     தண்டையார்பேட்டை    497
5     ராயபுரம்     575
6     திருவிக நகர்    768
7     அம்பத்தூர்   686
8     அண்ணா நகர்   972
9     தேனாம்பேட்டை   728
10     கோடம்பாக்கம்   918
11     வளசரவாக்கம்   607
12     ஆலந்தூர்    562
13     அடையாறு    735
14     பெருங்குடி    394
15     சோழிங்கநல்லூர்   209
16     இதர மாவட்டம்    2721