டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், பாதிப்பில் இருந்து  44,157 மீட்கப்பட்டு உள்ளதுடன், 389 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் கட்டுக்குள் உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள தளர்வுகள் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அதேவேளையில், தடுப்பூசி போடும் பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதுடன், உயர்நிலை மற்றும் கல்லுரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 25,072  பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,24,49,306 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 44,157 பேர் குணமடைந்து உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,16,80,626 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் மேலும் 389 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,34,756 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 3,33,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 58,25,49,595 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,95,543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.