சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 2,230 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

சமீபகாலமாக தமிழ்நாடு காவல்துறையினன் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. காவலர்களின் மனிதாபிமான மற்ற செயலால் அஜித்குமார் போன்ற பலர் மரணங்களை எதிர்கொண்டது நாடு முழுவதும் விவாதப்பொருளாக மாறியது. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழ்நாடு காவல்துறை, தற்போது ஆளும் கட்சிகளின் ஏவல்துறையாக மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.
இதைத்தொடர்த்நது, தமிழகம் முழுவதும் காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது, ஏற்கனவே 4 ஐஜிக்கள், 2 டிஐஜிகள், 29 எஸ்பிக்கள், 40 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 230 காவலர்களை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவிட்டார்.
குறிப்பாக சர்ச்சையில் சிக்கிய காரணத்தினாலும், நிர்வாக காரணத்திற்காகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.