சென்னை: தமிழ்நாட்டில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 2,222 பணியிடங்களை தேர்வு செய்ய 2024ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியான டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு 2,222 பேர் நேரடி நியமனம் செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் 7ஆம் தேதி அதற்கான தேர்வு நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
முழுமையான விவரங்களைப் பெற கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…