ரேலி

பி யை சேர்ந்த பரேலி மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு பேருந்தும் லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன.  இதில் 22 பேர் மரணம் அடைந்தனர்

உ பி மாவட்ட அரசு போக்குவரத்து துறை பேருந்து ஒன்று 41 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் வந்துக் கொண்டிருந்தது.  இந்த பேருந்து டில்லியில் இருந்து கோண்டா மாவட்டம் நோக்கி பயணத்துக் கொண்டிருந்தது.   ”படா பை பாஸ்” என்னும் இடத்தின் அருகே வந்துக் கொண்டிருந்த போது லாரி ஒன்றில் பேருந்து வேகமாக மோதியது.  மோதியதில் இரு வாகனங்களும் பற்றிக்கொண்டு கொழுந்து விட்டு எரிந்தன.  தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்  ஆனால் அதற்குள் தீயில் கருகி 22 பயணிகள் உயிரிழந்தனர்.  15 பயணிகள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

விபத்தை நேரடியாக பார்த்தவர்கள் இறந்தவர்களின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி விட்டதாக தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பேருந்து ஓட்டினர் மரணம் அடைந்தார்.  நடத்துனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லாரியை ஓட்டி வந்த ஓட்டினர் சம்பவ இடத்திலிருந்து ஓடி விட்டார்.  அவர் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை.

உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மரணம் அடைந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ, 50 ஆயிரமும் உதவித்தொகை அளிப்பதாக அறிவித்துள்ளார்