காஞ்சிபுரம்,

நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல்வர் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பட்டு சேலைகளுக்க 22 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நெவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பட்டுத்தொழிலாளர்கள் கொதித்துபோய் உள்ளனர். மத்தியஅரசின் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் முழுவதும் பட்டுத்தொழிலாளர்கள் இன்ற கடை அடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பட்டுச் சேலை மீதான 22 சதவிகித ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் பட்டுச் சேலை விற்பனையாளர்கள் இன்று கடையடைப்பு நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக காஞ்சிபுரம் நகர் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

பட்டுசேலைக்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம். இங்கு நெய்யப்படும் பட்டு சேலையானது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.  காஞ்சிபுரம் பகுதியில் பட்டு நெசவுத் தொழிலில் பல்லாயிரக் கணக்கான  நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், ‘பட்டுப் புடவைகள் மீதான 22 சதவிகித வரியைக் கூட்டுவதால் பட்டு நெசவுத் தொழில் அழியும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பட்டு நெசவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக மத்திய அரசின் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம்  பட்டு கூட்டுறவு சங்கம், பட்டு வியாபாரிகள், தரகர்கள் உள்பட அனைத்து வியாபார அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

இதையடுத்து,  தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் தலைமையில் காஞ்சிபுரம் தேரடியிலிருந்து மூங்கில் மண்டபம் வரை மனிதச் சங்கிலி அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.