சென்னை:

புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் பரவி கொரோனா சிறைக்கைதிகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னை புழல் சிறையில், 30 கைதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் குணப்படும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 30 கைதிகளில் 22 பேர் 5 நாள் தொடர் சித்த மருத்துவ சிகிச்சை காரணமாக குணமடைந்து உள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதில், முதியவர்கள் மற்றும் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 6 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 24 பேர் சிறையில் உள்ள வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தமருத்துவ நிறுவனம், சித்த மருத்துவர் வீரபாபுவுடன் இணைந்து சிறையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளை கொடுத்தனர்.

தொடர்ந்து இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட5 நாள் சிகிச்சையில் 22 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மேலும், 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.