22செ.மீ மழை: வெள்ளத்தில் மிதக்கிறது ஆந்திரா! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

Must read

ந்திர மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 22.8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதிக்க பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் ஏராளமான வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.குண்டூர் மாவட்டம் தான் இதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகரிகல்லு, சத்தேனபள்ளி, நர்சராவ்பேட், முப்பல்லா, மேடிகொண்டுரு போன்ற பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அடை மழை பெய்து வருகிறது.
10 முதல் 21 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
அதிகப்படியாக ஆந்திராவிலுள்ள  பால்நாடு பகுதியில் கடந்த 15 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக 22.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 
அந்த மாவட்டத்தில் உள்ள சத்தேனபள்ளி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.
andhra-top
மக்கள் உணவின்றி அவதிப்படுகின்றனர்.  வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கிராமத்தை சுற்றி உள்ள காட்டாற்று வெள்ளமும்,  அந்த பகுதிகளில் உள்ள சிற்றாறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளமும் சேர்ந்து சாலையில் ஓடுவதால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
மசூலிப்பட்டணம் பஸ் நிலையம் வெள்ளத்தில் மிதக்கிறது .குரோசுரு என்ற இடத்தில் அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதனுள் இருந்த  40 பயணிகளையும் அருகே உள்ள கிராம மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 7 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
andhra1
குண்டூர் டிவிஷனில் சத்தேனபள்ளி-பிடுகுரல்லா பகுதிகளுக்கு இடையே ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. 3 பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லக்கூடிய பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன, சில ரெயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
நாகார்ஜுன சாகர் அணைக்கு மழை காரணமாக அதிகமான தண்ணீர் வருகிறது. தற்போது 25 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள அந்த அணையில் 30 டி.எம்.சி.யாக அதிகரித்ததும் உபரிநீரை கடலுக்கு திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இவை வீணாக கடலில் கலக்கின்றன.
கிருஷ்ணா, பிரகாசம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்துவருகிறது.
andhara
இதேபோல தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் நகரில் பல குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
அடுத்த 36 மணி நேரத்துக்கு இந்த பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

More articles

Latest article