சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, வெடி வெடித்தது காரணமாக  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 26, 27 தேதிகளில் சேர்ந்த சுமார்  22.58 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி, வெடிகள் வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும்  வெடிக்கள், மத்தாப்பு. பூச்சட்டி போன்ற வெடிகளை கொளுத்தி மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதற்கிடையில்,  தீபாவளி குப்பைகளை உடனுக்குடன் அகற்ற துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். நகரில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படாமல் தடுக்கும் விதமாக தீபாவளிக்கு மறுதினமே மாநகரில் அனைத்து வாா்டுகளிலும் துரிதமாகக் குப்பைகளை அகற்ற துப்புரவு ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டருந்தது.

இந்தி நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அக். 26, 27 தேதிகளில் 22.58 டன் பட்டாசு கழிவுகள் சேர்ந்தன. அவைகள் அகற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

அதுபோல  கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் தீபாவளி பண்டிகைக்கு, பட்டாசுகள் வெடிப்பதன் மூலமாக 50 டன்னுக்கும் அதிகமாக சேர்ந்த குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் 900 டன் குப்பை வரை தேங்கி இருக்கலாம் என கூறும் மாநகராட்சி,  இன்று ‘மாஸ் கிளீனிங்’ நடைபெற்W வருவதாகவும் தெரிவித்து உள்ளது.