முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 22.48 லட்சம் அபராதம் வசூல்

Must read

சென்னை:
மிழகத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக நேற்று ஒரே நாளில் வடக்கு மண்டலத்தில் 2,795 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் 1,709 பேர், மேற்கு மண்டலத்தில் 1,328 பேர், தெற்கு மண்டலத்தில் 2,728 பேர், நகர் புறங்களில் 2,681 பேர் என மொத்தம் 11,241 பேர் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு ெசய்துள்ளது.

மேலும் அவர்களிடம் அபராதமாக ரூ.22 லட்சத்து 48 ஆயிரத்து 200 வசூலித்துள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி கடைப்படிக்காத 372 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article