சென்னை: தமிழகத்தில் நேற்று 1,647 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 198 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 4,56,04,563 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. அவர்களில் இதுவரை 26,48,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35,379 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர். அதேவேளைய்ல் 25,96,316 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 16,993 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மேலும் புதிதாக 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் 5,48,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2 பேர் கூட உயிர் இழந்துள்ளதுடன், இதுவரை 8,450 பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். 183 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,37,592 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,055 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிபட்சமான பாதிப்புகள் தேனாம்பேட்டை மற்றும் அண்ணா நகர் மண்டலத்தில் உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் பார்த்தால் அதிகபட்சமாக அண்ணா நகர், தேனாம்பேட்டை கோடம்பாக்கத்தில் 900க்கு மேல் உள்ளது. தற்போது சென்னையில் 0.4 சதவீதம் பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதாவது 2055 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
21.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 48,94,362 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 21.09.2021 அன்று 14,020 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மண்டலம் வாரியாக விவரம்: