ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்கொண்டுள்ளது. தற்போது உருமாறிய நிலையில், தொற்று பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில், தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இருந்தாலும் தொற்று பரவல் நீடித்துக்கொண்டேதான் இருக்கிறது.
தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 11,19,55,416 ஆக உள்ளது. இதுவரை 8,73,16,322 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதுபோல, உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 24லட்சத்துக்கு 77ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், 2.21 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93 ஆயிரத்து 900-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.