பெங்களூர்:
விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பியவர் குறித்து விசாரணை நடத்திய போது, அதில் பெங்களூரில் உள்ள செல்வி ரவி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம். மேலும் விசாரணைக்காக அவரை டெல்லி அழைத்து செல்ல உள்ளோம். டெல்லியில் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார் என்று கூறினார்.

இவர் மீது அண்மையில், காவல்துறையினர் பிரிவு 124 ஏ, 153, 153 ஏ மற்றும் கருவித்தொகுப்பை உருவாக்கி பரப்பிய மக்களுக்கு எதிராக 120 பி ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]