சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் ரூ.518.17 கோடியிலான 21 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு  வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 1-வது குறுக்குத் தெருவில் மாற்றுத்திறனாளி குழந்தை களுக்காக ரூ.2.23 கோடியிலும், வளசரவக்கம் மண்டலம் நொளம்பூர் சக்தி நகர் பிரதான சாலையில் ரூ.1.95 கோடியிலும் உணவு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திரு.வி.க நகர் மண்டலம் ஓட்டேரி குக்ஸ் சாலை சந்திப்பு, கிருஷ்ணதாஸ் சாலையில் ரூ.1.11 கோடியிலும், மாதவரம் ரவுண்டானா அருகில் மணிநகர் 3-வது தெருவில் ரூ.1.03 கோடியிலும், சோளிங்கநல்லூர் மண்டலம் கண்ணகி நகர் காவல் நிலையம் அருகில் ரூ.1.03 கோடியிலும், வளசரவாக்கம் மண்டலம் முகப்பேர் மேற்கு சாலையில் ரூ.75 லட்சத்திலும், மாதவரம் மண்டலம் சவுமியா நகரில் ரூ.90 லட்சத்திலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மணலி மண்டலத்தில் மணலி ஆமுல்லவாயலில் ரூ.15.90 கோடியிலும், பர்மா நகரில் ரூ.14.33 கோடியிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

அடையாறு மண்டலம் பக்கிங்காம் கால்வாய்க் கரையில், கஸ்தூரிபாய் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை ரூ.18.71 கோடியில் அடர்வனக் காடுகள், நடைபாதை, மிதிவண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் வாரியம்

மணலி மாத்தூர் பகுதியில் ரூ.44.90 கோடியிலும், இடையான் சாவடி, சடையான்குப்பம், கடப் பாக்கத்தில் ரூ.28.21 கோடியிலும், பெருங்குடி மண்டலம் ஜல்லடியான் பேட்டையில் ரூ.34.63 கோடியிலும் குடிநீர்த் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின், ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டம் சார்பில் கூவம் ஆற்றின் கரையோரம் சேத்துப் பட்டில் ரூ.3.29 கோடியில், 10 லட்சம் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திரிப்பு நிலையம், ஆலந்தூர் நிலமங்கை நகரில் ரூ.25.52 கோடியில் கூடுதல் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 547 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.224 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், திருப்பூர் மடத்துக்குளம். உடுமலைப்பேட்டையில் 5 பேரூராட்சிகளில் 318 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.85.75 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.3.60 கோடியிலும், தென்காசியில் ரூ.4.15 கோடியிலும் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட் டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூ.4 கோடியில் சுகாதாரப் பணியாளர் குடியிருப்பு, திருப்பூர் மாநகராட்சி தென்னம் பாளையத்தில் ரூ.2.18 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மொத்தம் ரூ.518.17 கோடி மதிப்பிலான 21 பணிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்துவைத்தார்.

மேலும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம்பராமரிக்கப்பட்டு வரும் தொல்காப்பிய பூங்காவில், 3.20 கி.மீ. நீளத்துக்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதியளித்து, அதற்கான அனுமதி அட்டையை பொதுமக்களுக்கு முதல்வர் வழங் கினார்.

சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் ஆணையரகத்தில் பணியாற்றி, பணிக்காலத்தில் உயிரிழந்த 126 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனை ஆணைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார்.

அதேபோல, சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் பணியாற்றி, கரோனா தொற்றால் காலமான 65 நிரந்தரப் பணியாளர்கள், 6 ஒப்பந்தப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.16.55 கோடியை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் எம்.பி., எம்எல்ஏ-க்கள், தலைமசை் செயலர் வெ.இறையன்பு, நகராட்சி நிர்வாகச் செயலர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் சா.விஜயராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.