ஓசூர்:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு, காலியாக உள்ள  21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம்  நடத்துவோம் என்று தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது,  அமைச்சர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால்,  ஓசூர் தொகுதி காலியாக உள்ளது. இதை முறைப்படி காலியானதாக  அறிவிக்க வேண்டும் என சபாநாயகரை வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலோடு, ஏற்கனவே காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதி மற்றும் தற்போது காலியாக உள்ள ஓசூர் சட்டமன்ற தொகுதி உள்பட  மொத்தமுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையம் அவ்வாறு சேர்த்து நடத்தவில்லை என்றால், மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை திமுக முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.