டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,326 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், 453 பேர் பலி உள்ளனர். அதே வேளையில் 8,043 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திலான கொரோனா பாதிப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி புதிதாக மேலும் 5,326 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,52,164 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 453 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 4,78,007 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 8,043 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,41,95,060 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.40% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் தொற்று பாதிக்கப்பட்ட 79,097 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.23% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 1,38,34,78,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 64,56,911 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 10,14,079 சாம்பிள்கள் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 66,61,26,659* சாம்பிள்கள் சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஒமிக்ரான தொற்று பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேருக்கும், டெல்லி (28), ராஜஸ்தான் (17) மற்றும் கர்நாடகா (19), தெலங்கானா (20), குஜராத் (11), கேரளா (15), ஆந்திரப் பிரதேசம் (1), சண்டிகர் (1), தமிழ்நாடு (1) ) மற்றும் மேற்கு வங்கம் (4) என மொத்தம் 171 பேருக்கு உறுதியாகி உள்ளது.